அச்சப்படவே வேண்டாம்… அனைவரும் ஆல் பாஸ் : அரியர் மாணவர்களுக்கு அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!

16 September 2020, 4:16 pm
k-p-anbalagan - updatenews360
Quick Share

சென்னை : அரசு அறிவித்தபடி கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என அமைச்சர் அன்பழகன் உறுதியளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கினால் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை எழுதும் மாணவர்களை தவிர்த்து, பிற ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதோடு, அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனிடையே, அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கழகம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தமிழக அரசின் முடிவிற்கு ஏ.ஐ.சி.டி.இ. எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனக் கூறி உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அதுபோன்ற மின்னஞ்சலோ, கடிதமோ இருந்தால் அதனை வெளியிட வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆனால், இதுவரையில் அது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ.யின் அதிகாரப்பூர்வமாக எந்த மின்னஞ்சலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், சட்டசபையில் இது தொடர்பான கேள்வி ஒன்றிற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்திருந்தார். அதில், “செமஸ்டர் இறுதி தேர்வு தவிர பிற தேர்வுக்கு, பணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சியடைந்தவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதேபோல, அரியர் கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சிப் பெறுகின்றனர். யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ வழிகாட்டுதலின் படியே தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்,” எனக் கூறினார்.

Views: - 0

0

0