தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் தேர்ச்சி: மதுரை காமராஜர் பல்கலை. அறிவிப்பு…!!

3 November 2020, 6:12 pm
kamarajat univ - updatenews360
Quick Share

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது எப்படி? என்பது குறித்தும் அரசு தெரிவித்தது. ஆனால் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கான தேர்வு முடிவையும் ஒவ்வொரு பல்கலைக்கழகங்கள் அறிவித்து வருகின்றன.

அதன் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர இதர செமஸ்டர்களில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்வு முடிவை வெளியிட்டு இருக்கிறது. அரியர் தேர்வுக்காக கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு இந்த தேர்ச்சி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தேர்வு முடிவில் திருப்தி இல்லாத மாணவ-மாணவிகள் மீண்டும் தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 31

0

0