தவறை தட்டிக் கேட்ட பாஜகவினர் கைது.. தவறு செய்த திமுக எம்எல்ஏ மகன் மீது ஆக்ஷன் எங்கே? அண்ணாமலை கண்டனம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குமரன் நகர் பகுதியில் வசித்து வரும் திமுக நிர்வாகி தென்றல் செல்வராஜ் மற்றும் அவரின் மகன் மணிமாறன் ஆகியோர் அயோத்தி ராமருக்கு மாட்டுக் கறி ரெடி என சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக நிர்வாகி செல்வராஜ் வீட்டிற்கு சென்ற பாஜகவினர், அங்கிருந்தவர்களிடம் ராமர் படத்தை வழங்க முற்பட்டனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகியான மணிமாறன் பெரியார் படத்தை வைத்துக்கொண்டு பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்து போலீசார், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக நகர தலைவர் பரமகுரு உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தொடர்ச்சியாக இந்து மத விரோதப் போக்கில் ஈடுபட்டு வரும் திமுக அரசு, நாட்டின் பல கோடி மக்களின் நம்பிக்கை மற்றும் பல நூறு ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய, வரலாற்றுச் சிறப்புமிக்க அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவை, தரக்குறைவாக விமர்சித்த, பொள்ளாச்சி திமுக நிர்வாகியை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்பிய கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகரத் தலைவர் திரு
பரமகுரு, கோவை தெற்கு மாவட்டத் துணைத் தலைவி திருமதி. சாந்தி உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகளைக் கைது செய்திருக்கிறது.
பொதுமக்களின் அடிப்படை உரிமையான வழிபாடு உரிமைகளையும், இந்து மத நம்பிக்கையையும் புண்படுத்திய திமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் தவறைத் தட்டிக் கேட்ட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வேங்கைவயல் குற்றவாளிகளையோ, வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை கடுமையாகத் தாக்கித் துன்புறுத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் குடும்பத்தினரையோ கைது செய்யவில்லை. தமிழகம் முழுவதும் சீர்குலைந்து இருக்கும் சட்டம் ஒழுங்கைக் காக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால், பல கோடி மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்திய திமுகவினரை எதிர்த்து, மக்களின் குரலாகப் போராடிய பாஜகவினரைக் கைது செய்வதில் மட்டும் அவசரம் காட்டுகிறது திமுக அரசு.
ஆன்மீக பூமியான தமிழகத்தில், பொதுமக்களின் இறைநம்பிக்கையைத் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு, எளிதில் தப்பித்து விடலாம், எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவி விடலாம் என்ற எண்ணத்தில் இன்னும் திமுக இருந்தால், அதை மாற்றிக் கொள்வது அவர்களுக்கு நல்லது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.