புதிய மாவட்டங்களும்… அதன் சட்டப்பேரவை தொகுதிகளும்… வரையறையை வெளியிட்டது தேர்தல் ஆணையம் !!

22 October 2020, 1:28 pm
Tamil Nadu Election Commission - Latest Tamil Nadu News
Quick Share

சென்னை : தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டப்பேரவை தொகுதிகளை வரையறை செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றும், நிர்வாக வசதிக்காகவும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக, தொகுதிகளை வரையறை செய்யும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருந்தது.

இந்த நிலையில், புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டப்பேரவை தொகுதிகளை தமிழக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி,

செங்கல்பட்டு மாவட்டம் :

சோழிங்கநல்லூர்
பல்லாவரம்
தாம்பரம்
செங்கல்பட்டு
திருப்போரூர்
செய்யூர்
மதுராந்தகம்

காஞ்சிபுரம் மாவட்டம் :

ஆலந்தூர்
ஸ்ரீபெரும்புதூர்
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்

திருப்பத்தூர் மாவட்டம் :

வாணியம்பாடி
ஆம்பூர்
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர்

வேலூர் மாவட்டம் :

காட்பாடி
வேலூர்
அணைக்கட்டு
குடியாத்தம்
கீழவைத்தியனாங்குப்பம்

ராணிப்பேட்டை மாவட்டம் :

அரக்கோணம்
சோளிங்கர்
ராணிப்பேட்டை
ஆற்காடு

விழுப்புரம் மாவட்டம் :

செஞ்சி
மைலம்
திண்டிவனம்
வானூர்
விழுப்புரம்
விக்கிரவாண்டி
திருக்கோவிலூர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் :

உளுந்தூர்பேட்டை
ரிஷிவந்தியம்
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி(தனி)

நெல்லை மாவட்டம் :

நெல்லை
அம்பாசமுத்திரம்
பாளையங்கோட்டை
நாங்குநேரி
ராதாபுரம்

தென்காசி மாவட்டம் :

சங்கரன்கோவில் (தனி)
வாசுதேவநல்லூர்(தனி)
கடையநல்லூர்
தென்காசி
ஆலங்குளம்

Views: - 31

0

0