எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம்… அதிமுக கடிதத்திற்கு பதிலளிக்காதது ஏன்..? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
17 October 2022, 2:00 pm
Appavu Sad - Updatenews360
Quick Share

எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அதிமுக எழுதிய கடிதத்திற்கு பதில் அளிக்காதது ஏன்..? என்பது குறித்து பேரவையில் பதில் அளிக்கப்படும் என பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பின் பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் கூடிய அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் 19 ம் தேதி வரை இரண்டு நாட்கள் பேரவை கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 22-23 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் பதிலுரை வாக்கெடுப்பு நடைபெறும்.

நாளை நடைபெறும் பேரவை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு தேவைப்பட்டால் விவாத த்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்தி எதிர்ப்பு அறிக்கை குறித்தும் விவாதிக்கபட உள்ளது.

எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் 4 கடிதமும் ஓ.பி.எஸ் தரப்பு இரண்டு கடிதமும் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பேரவையில் கடிதம் கொடுத்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் பட்சத்தில் உரிய பதில் பேரவையில் அளிக்கப்படும், இது குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க முடியாது.

இந்த விவகாரம் குறித்து கடிதம் அளித்துள்ள அதிமுக உறுப்பினர்கள் தனது அறையிலும் வந்து இதற்கான விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம். தங்களது கட்சியின் பொன்விழா காரணமாக இன்றைய பேரவை கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தனக்கு தகவல் கிடைத்துள்ளது. நாளை பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கருதுகிறேன், என தெரிவித்தார்.

Views: - 437

0

0