மல்லிப்பூ பாடலுக்கு பாத்ரூமில் க்யூட்டாக நடனமாடிய சுட்டிக்குழந்தை : என்னமா இப்படி பண்றீங்களேமா.. வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2022, 9:03 am
Mallipoo song Kid - Updatenews360
Quick Share

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டிற்கு முன்னதாகவே லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

குறிப்பாக படத்தின் மல்லிப்பூ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் பாடலை பிரபலங்கள் பலரும் வீடியோக்களாக பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது குட்டிக் குழந்தை ஒன்று இந்தப் பாடலுக்கு ஏற்றபடி குளியலறையில் ஆடியபடி குளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்புலத்தில் மல்லிப்பூ பாடல் ஒலிக்க அந்த குழந்தை ஆடும் அந்த வீடியோ காண்பவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளதை இந்த வீடியோ மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்புவின் அடுத்த படமான பத்து தல படத்திற்கும் ஏஆர் ரஹ்மானே இசையமைத்து வரும் சூழலில், அந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழில் அடுத்தடுத்த வெற்றிப் பாடல்களை ஏஆர் ரஹ்மான் கொடுத்து வருகிறார். பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த ஹிட்களை அவர் ரசிகர்களுக்கு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 501

12

3