மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை : முடிவில் இருந்து பின்வாங்கிய தமிழக அரசு… பெற்றோர்கள் நிம்மதி..!!!

Author: Babu Lakshmanan
23 October 2021, 11:40 am
Baby school - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கும் முடிவை தமிழக அரசு வாபஸ் பெற்றது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், தமிழகத்தின் சராசரி கொரோனா பாதிப்பு 1,200க்கும் குறைவாக இருந்து வருகிறது.

இதனிடையே, மழலையர் உள்பட 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நவ.,1ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளை திறக்கும் முடிவில் இருந்து தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.

தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என்றும், மழலையர் எல்.கே.ஜி யூகேஜிக்கு பள்ளிகளை திறப்பு பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Views: - 145

0

0