வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை : பத்ரிநாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்.. யாத்ரீகர்கள் ஏமாற்றம்..!!
Author: Babu Lakshmanan18 October 2021, 11:41 am
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், பத்ரிநாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அது மட்டுமில்லாமல், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே, உத்தரகாண்ட் மாநிலத்திலும் பேய் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பத்ரிநாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, உத்தர பிரதேசம், வடகிழக்கு ராஜஸ்தான், வடக்கு மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் கங்கை நதிக்கரையோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
0
0