ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. இந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை ஒன்றை எழுதியிருந்தார். அதாவது, பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும், அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள், என பிரதமர் மோடியை அவர் புகழ்ந்து எழுதியிருந்தார்.
கடும் விமர்சனங்கள் எழுந்த போதிலும், எனது சொந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாஜகவை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்று திராவிடக் கட்சிகள் கங்கனம் கட்டி வரும் நிலையில், தமிழகத்தில் பிரபலமான ஒரு திரையுலக பிரபலம், பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக் கூறுவதா..? என்று திராவிட இயக்கத் தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மேலும், கடந்த இருநாட்களாக திராவிடன், கருப்புத் தமிழன் என்று தமிழகத்தில் பரபரப்பான பேச்சே அடிபட்டு வந்தது.
இந்த நிலையில், இளையராஜாவைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக இயக்குநர் பாக்யராஜ் பேசியிருப்பது தமிழக அரசியல் கட்சிகளிடையே, குறிப்பாக திராவிட கட்சிகள் மற்றும் அமைப்புகளிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்யராஜ், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருப்பதாவும், பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். அதோடு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக ஓய்வின்றி உழைத்து வருவதாகவும் கூறி, தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
பொதுவாக, பிரபலங்கள் அரசியல் கருத்துக்களை தெரிவித்தால், தங்களுக்கு ஏதேனும் நெருக்கடி வருமோ, என்ற அச்சத்தில் பொதுவெளியில் எதுவும் கூறாமல் இருப்பது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு இளையராஜா முதன்முதலாக பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். இதற்கு அவர் பல்வேறு எதிர்ப்புகளை எதிர்கொண்டார்.
ஆனால், தற்போது, அதனை எல்லாம் பொருட்படுத்தாமல், பாஜகவுக்கு ஆதராவாக மற்றுமொரு பிரபலம் குரல் கொடுத்திருப்பது திராவிடக் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் பாஜகவுக்கு ஆதரவாக பேசியிருப்பது, தமிழ் திரையுலகத்தின் ஒரு பிரிவினர் பாஜக பக்கம் திரும்புகின்றனரா…? என்ற கேள்வி எழுந்துள்ளது.
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
This website uses cookies.