6 மாத வங்கிக் கடனுக்கான கூட்டு வட்டி தள்ளுபடி..? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம்..!

Author: Babu
5 October 2020, 1:15 pm
supreme_court_updatenews360
Quick Share

டெல்லி : வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால், வங்கிக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் மற்றும் கிரெடிட் கார்டுக்கான தவணைத் தொகைகளை செலுத்துவதில் வாடிக்கையாளர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி, ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவின் பேரில், கடன் தவணைகளை செலுத்துவதில் அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால், கடன் தவணை தொகையை செலுத்தும் காலத்தை அதிகரித்ததோடு, கடன் மற்றும் வட்டி சுமை அதிகரிப்பதை சுட்டிக் காட்டிய பல்வேறு தரப்பினர், இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது எனக் கூறி வந்த மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

அதில், ரூ. 2 கோடி வரையில் கடன் பெற்றுள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், கல்வி கடன் பெற்றவர்கள், வீட்டுக்கடன், வாகனக்கடன், ரூ. 2 கோடி வரை கடன் பெற்ற தொழில்முனைவோர்கள்,ரூ. 2 கோடி வரை கன்ஸ்யூமர் கடன் பெற்றவர்கள், ரூ. 2 கோடி ரூபாய் வரை கிரெடிட் கார்டு நிலுவை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 6 மாதத்திற்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசை விரிவான பிராமணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு கூறி, வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Views: - 46

0

0