வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..: செப்டம்பரில் வங்கிகள் விடுமுறை எப்போது?…RBI அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
2 September 2021, 5:21 pm
RBI_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: 2021 செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் பணபரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிடவும் அறிவுறுத்தியுள்ளது.

மூன்று பிரிவுகளின் கீழ் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விடுமுறை அளிக்கிறது. அவை Negotiable Instruments Act சட்டத்தின் கீழ் விடுமுறை, Negotiable Instruments Act மற்றும் நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை, மூன்றாவதாக வங்கிகளின் கணக்குகளை முடிப்பதற்கான விடுமுறை என மூன்று வகைப்படும்.

செப்., 8 – கவுகாத்தியில் ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி விழா, செப்., 9 – கேங்டாக்கில் தீஜ் (ஹரித்தாலிகா) விழா, செப்., 10 – விநாயகர் சதுர்த்தி/சம்வத்சரி

மேற்கூறிய நாட்களில், அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி ஆகிய நகரங்களில் வங்கிகள் மூடப்படும்

செப்., 11 – பனாஜியில் விநாயகர் சதுர்த்தி (2 வது நாள்) காரணமாக விடுமுறை, செப்., 17 – கர்மா பூஜை (ராஞ்சியில் விடுமுறை), செப்., 20 – இந்திரஜத்ரா பண்டிகை (கேங்டாக்கில் விடுமுறை)செப்., 21 – ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் (கொச்சி, திருவனந்தபுரத்தில் விடுமுறை) என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட விடுமுறைகள் தவிர, செப்டம்பர் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வங்கிகள் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் காரணமாக மூடப்படும். ஞாயிற்றுக்கிழமைகள் காரணமாக செப்டம்பர் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும் வங்கிகள் மூடப்படும்.

விடுமுறை நாட்களிலும் ஆன்லைன் வங்கி சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்றும், வங்கி வாடிக்கையாளர்கள் விடுமுறை நாட்களில் வங்கி கிளைகளில் பணம் எடுக்க மற்றும் டெபாசிட் செய்ய முடியாது. இருப்பினும், இந்த நாட்களில் ஏடிஎம்கள், மொபைல் வங்கி சேவைகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 308

0

0