பி.இ. செமஸ்டர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல் : மாணவர்கள் அவதி!!

12 September 2020, 4:15 pm
anna university - updatenews360
Quick Share

பி.இ. இறுதி செமஸ்டர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிகளை போன்றே கல்லூரி இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து பிற ஆண்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அண்ணா பல்கலை., மதுரை காமராஜர் பல்கலை., கோவை பாரதியார் பல்கலை., காரைக்குடி அழகப்பா பல்கலை., கோவை வேளாண் பல்கலை., மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை., ஆகியவை ஆன்லைன் முறையிலும், பிற ஏழு பல்கலைக்கழகங்கள் நேரடி தேர்வையும் நடத்த முடிவு செய்துள்ளன. சில பல்கலைக்கழகங்கள் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை.

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு வரும் 15ம் தேதி முதல் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வினை எழுதும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், பி.இ. இறுதி செமஸ்டர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதில், இணையதள பிரச்சனையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நீண்ட நேரம் முயற்சித்தும் தேர்வுக்காக பதிவு செய்ய முடியாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், தேர்வு கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே அண்ணா பல்கலை., தீவிரம் காட்டி வருவதாகவும், ஹால் டிக்கெட் உள்ளிட்ட மாணவர்களின் கல்வி சம்பந்தமான விபரங்களை வெளியிடுவதில் தாமதம் செய்து வருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Views: - 0

0

0