இனியாவது உண்மையா இருங்க… மக்களிடம் அவிழ்த்துவிட்ட பொய்களுக்கு மன்னிப்பு கேளுங்க : CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை அட்வைஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2022, 7:41 pm
Annamalai - Updatenews360
Quick Share

தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 8 வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று இப்போது திமுக அரசு உணர்ந்துள்ளது.

இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களிடம் அவிழ்த்துவிட்ட பொய்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் , தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்றாத திமுக அரசு, பரந்தூர் மக்களுக்கு தரும் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார்கள்? மக்கள் எப்படி நம்புவார்கள்?

தேவையான இழப்பீட்டுத் தொகை, மாற்று குடியிருப்புகள் அனைத்தையும் வழங்கிவிட்டு இடத்தை கேட்கலாம் எனவும் இழப்பீட்டுத் தொகை, மாற்று குடியிருப்புகள் அனைத்தையும் வழங்கிவிட்டு இடத்தை கேட்கலாம்.

இனியும் அரசியல் லாபத்துக்காக மக்களை திசைதிருப்பாமல் தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும் என அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Views: - 176

0

0