பீஸ்ட் படத்துல இதுமாதிரி காட்சிகளா..? ஏற்றுக்கொள்ளவே முடியாது… பொங்கி எழுந்த பிரேமலதா விஜயகாந்த்..!!

Author: Babu Lakshmanan
14 April 2022, 6:07 pm
Quick Share

பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில காட்சிகளுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படம் நாடு முழுவதும் திரையரங்கில் நேற்று வெளியானது.

படம் குறித்து பல்வேறு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில், இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகள் பற்றியும் கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

குறிப்பாக, இந்தத் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இப்பட்த்தை கண்டித்து வருகின்றன. இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் தேசிய முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அம்பேத்கரின் 132வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தேமுதிக சார்பில் பொதுமக்கள் பயனடையும் வகையில், தண்ணீர் பந்தலை அவர் திறந்து வைத்தார்.

அதன்பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது :- நான் இன்னும் பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை. அந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள்போல் சித்தரிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் தேமுதிக முதல் ஆளாக களத்தில் நிற்கும்.

தமிழக அரசு சொத்து வரி உயர்த்தியதைக் கண்டித்து 21 மாவட்டங்களில் தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆளுநர் புத்தாண்டு தேனீர் விருந்தை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளனர். அது அவர்களின் உரிமை. ஆனால் தேநீர் விருந்துக்கு தேமுதிகவுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை.

கடந்த ஆட்சியைப் போன்று தமிழகம் இந்த காலத்திலும் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது போல, தற்போதும் இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்க வேண்டும். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் விசிக-பாஜக இடையே ஏற்பட்ட மோதல் பெரும்வருத்தத்தை அளிக்கிறது.

இதுபோல் தலைவர்களின் பிறந்த நாள் அன்று மரியாதை செலுத்துவதில் மோதல் ஏற்படுவது தலைவர்களுக்கு அவமரியாதையை கொடுக்கும் செயல், எனக் கூறினார்.

Views: - 832

0

0