இன்று வெளியாகிறது பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி..! தலைமை தேர்தல் ஆணையர் அறிவிக்கிறார்..!

25 September 2020, 12:16 pm
Election_Commission_of_India_UpdateNews360
Quick Share

பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து அரசு நடவடிக்கைகளும் முடங்கியுள்ள நிலையில், திட்டமிட்டபடி மாநில சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல்கள் நடக்குமா..? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், ஏற்கனவே அறிவித்ததை போல தேர்தல்கள் அனைத்தும் நடைபெறும் என்றும, இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் பதவி காலம் வரும் அக்டோபர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை வெளியிட இருக்கிறார். கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால், தேர்தலுக்கு முன்னதாக கள நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என ஏற்கனவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 12

0

0