பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக : சட்டப்பேரவை தேர்தலில் ஆதிக்கம்..!!

10 November 2020, 11:25 am
modi - nithish - updatenews360
Quick Share

பீகார் : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஜேடியூ – பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி கட்சியே முன்னிலை வகித்து வந்தது. பாஜக – ஐக்கிய ஜனதா தளம் பின்னடைவை சந்தித்து இருந்தது. இதனால், நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்று காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி கட்சியினரும், தொண்டர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

ஆனால், போக போக பாஜக – ஜேடியூ கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. யாரும் எதிர்பார்க்காத விதமாக காங்கிரஸ் கூட்டணியை விட சுமார் 30 தொகுதிகள் அதிகமாக முன்னிலை பெற்றது. மொத்த உள்ள 243 தொகுதிகளில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 127 தொகுதிகளிலும், காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 103 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

அதிலும், பீகார் மாநிலத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதாவது, மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 71-ல் பாஜக முன்னிலை வகிக்கிது. மேலும், அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 53 இடங்களில் ஜேடியூ முன்னிலை பெற்றுள்ளது.

இதேபோல, ராஷ்டிரிய ஜனதா தளம் 62 தொகுதிகளிலும், காங்., 22 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

Views: - 23

0

0