நாளை வரை நீடிக்கும் பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

10 November 2020, 2:15 pm
bihar counting - updatenews360
Quick Share

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவாக வாக்கு எண்ணிக்கை நாளை வரை நீடிக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில், பாஜக – ஜேடியூ கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுதுள்ளது. காங்கிரஸ் கூட்டணியை விட சுமார் 30 தொகுதிகள் முன்னிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 134 தொகுதிகளிலும், காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 98 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இதனிடையே, பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவாக வாக்கு எண்ணிக்கை நள்ளிரவை கடந்து நீடிக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் “தேர்தலில் மொத்தம் 4.10 கோடி வாக்குகள் பதிவான நிலையில், பிற்பகல் வரையில் 1 கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. வழக்கமாக 26 சுற்றுக்களாக எண்ணப்படும் வாக்குகள், இந்த முறை 35 சுற்றுகளாக எண்ணப்படும். எஞ்சியுள்ள 3 கோடியுள்ள வாக்குகளை எண்ணுவதற்கு நள்ளிரவு வரை நீடிக்கும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 17

0

0