டுவிட்டர், பேஸ்புக்கில்தான் புலியா..? தர்மபுரி திமுக எம்பியை டார்டாராக கிளித்த அண்ணாமலை…!! (வீடியோ)

19 November 2020, 8:03 pm
annamalai - senthilkumar - updatenews360
Quick Share

தமிழகத்தில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அப்படியிருக்க, பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் வேல்யாத்திரை, கரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்காக, தர்மபுரியில் இன்று பாஜகா சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, தர்மபுரியின் திமுக எம்பி செந்தில்குமாரை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அவர் பேசியதாவது :- தர்மபுரி திமுக எம்பியாக இருக்கும் செந்தில்குமார் எனது நண்பர். என்னுடன் விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுத்தேன். ஆனால், அவர் அதனை மறுத்துவிட்டார். டுவிட்டர், பேஸ்புக்கில் மட்டும் தான் நீ புலியா…!!
கோபாலபுரத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக திமுக தலைவராகவும், அடுத்த முதலமைச்சர் என்ற கனவையும் முக ஸ்டாலின் கண்டு வருகிறார். அவருடன் சேர்ந்து செயல்படுகிறார்களா..?

Gobackmodi என்னும் சுவர் விளம்பரங்களை திமுகவினர் செய்து வருகின்றனர். தர்மபுரி தொகுதி எம்பியான செந்தில்குமார், இதுவரை மக்களுக்கு செய்த திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா..? பிச்சை எடுத்து கடந்த முறை ஓட்டு வாங்கி ஜெயித்துள்ளீர்கள். சாதிக் கலவரம், மதக்கலவரம் தூண்டுவதற்காக வேல்யாத்திரை நடத்தப்படுவதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர், எனக் காரசாரமாக பேசினார்.

ஏற்கனவே, கரூரில் Gobackmodi என்னும் வாசகத்துடன் அடங்கிய போஸ்டர்களை ஒருவாரத்தில் திமுகவினரே அழிக்க வேண்டும் என்றும், இல்லையேல், நாங்கள் அதனை அழிப்போம் என பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். மேலும், பாஜக சார்பில் ஒட்டப்படும் சுவர் விளம்பரங்களில், ’ஐந்து கட்சி அமாவாசை மற்றும் சுடலை ராஜா’ என்னும் பெயர்கள் இடம்பெறும் என்றும் கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு வார்னிங் கொடுத்தார்.

அண்ணாமலை எச்சரிக்கை விடுத்த 48 மணிநேரத்தில், பிரதமர் மோடியை விமர்சித்து எழுதப்பட்ட விளம்பர வாசகங்களை திமுகவினர் அழித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0

1 thought on “டுவிட்டர், பேஸ்புக்கில்தான் புலியா..? தர்மபுரி திமுக எம்பியை டார்டாராக கிளித்த அண்ணாமலை…!! (வீடியோ)

Comments are closed.