இன்னும் 6 மாதம்தான்… மொத்த கண்ட்ரோலும் நம்ம கையில : அண்ணாமலை அதிரடி.. மிரண்டு போன ஊடகங்கள்!!!

15 July 2021, 3:59 pm
annamalai bjp - updatenews360
Quick Share

சென்னை : தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அண்ணாமலை, செய்தியாளர்களிடம் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் பிரதமர் மோடியின் புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்தார். இதனை தமிழக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், கோவையில் இருந்து பதவியேற்பு விழாவிற்கு புறப்பட்ட அண்ணாமலைக்கு சென்னை வரையிலும் வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாஜக பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளை கண்டு கொள்ள வேண்டாம். அவர்கள் பாஜக குறித்து அவதூறான செய்திகளை பரப்புகின்றனர். தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுள்ளார். 6 மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம். இனி தவறான செய்திகளை அவர்கள் எவ்வாறு போடுகிறார்கள் என்பதை பார்த்து விடுவோம். பொய் செய்திகளை வைத்து அரசியல் செய்ய முடியாது.,” எனக் கூறினார்.

பாஜகவிற்கு எதிராக பொய்யான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 276

1

0