விவசாயிகளுக்காகவே ஆக., 5ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் : அண்ணாமலை அறிவிப்பு

Author: Babu
3 August 2021, 6:54 pm
annamalai bjp - updatenews360
Quick Share

விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காகத்தான் வரும் ஆக.,5ம் தேதி மேகதாது அணைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பிறந்த இடமான ஈசூராடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது ;- 1967க்கு பிறகு வந்த தமிழக அரசு பாடப்புத்தகத்தில் சுதந்திரப் போராட்ட குறித்த வரலாறு இல்லை. நிறைய வரலாறு புறக்கணிக்கப்பட்டுள்ளது. கீழடி யாருக்கும் சொந்தமில்லை. சமூகநீதியை கடந்து நட் தேர்வு முறை வெற்றி பெற்றுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுதி முதலில் பாஸ் செய்யட்டும்.

தமிழகத்தில் பாஜக நடத்தவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் அனைத்து எதிர்கட்சிகளுக்கும், ஆளும்கட்சிக்கும் எதிரானது. விவசாயிகளுக்காகவும், பொதுமக்களுக்காகவும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழக மக்களையும், தமிழர் உணர்வையும் பிரதமர் மோடி மதிக்கிறார், எனக் கூறினார்.

Views: - 300

0

0