வேணும்னா அத நீங்க எடுத்துக்கோங்க : 1க்கு பதிலாக 6…. அதிமுகவுடன் செம டீல் போடும் பாஜக..!!!
3 March 2021, 2:09 pmவரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் அதிமுக – பாஜக இடையே இழுபறி நீடித்து வருகிறது. 4 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்த நிலையில், இன்னும் தொகுதி பங்கீடு உறுதியாகவில்லை. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் 10 தொகுதிகளை பாஜக கேட்பதாகவும், ஆனால் அதனை தர அதிமுக மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், இரு கட்சியினரும் அடுத்து என்ன செய்வதென்பது தொடர்பாக மாறி மாறி ஆலோசனையை நடத்தி வருகின்றன.
முன்னதாக, தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை உங்களுக்கே விட்டுத் தருகிறோம். ஆனால், அதற்கு பதிலாக அந்த நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளையும் பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் 4 தொகுதிகளை வழங்க அதிமுக முன்வந்ததாக சொல்லப்படுகிறது.
இதன்மூலம், ஏற்கனவே தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக, தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கி விட வேண்டும் என்ற தீவிரமான எண்ணத்தில் இருப்பதே தெரிகிறது.
0
0