அப்பா கூட தொகுதி பக்கம் வந்தது தப்பா…? ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை கோரிய பாஜகவினர்..!!!
7 April 2021, 6:40 pmகோவை : சட்டப்பேரவை தேர்தல் விதிகளை மீது செயல்பட்டதாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் மொத்தம் அமைக்கப்பட்ட 88,294 வாக்குச்சாவடிகளில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடைபிடித்து இந்தத் தேர்தல் நடைபெற்றது.
இதனிடையே, கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் விதிகளை மீறியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
அதில், கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் கமல்ஹாசன், வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிக்குள் பார்வையிட அங்கீகாரம் உண்டு. ஆனால், அவருடன் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் விதிகளை மீறி அத்துமீறி நுழைந்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.
0
0