பணமோசடி வழக்கு.. அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் ; இல்லையேல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ; பாஜக அறிவிப்பு

Author: Babu Lakshmanan
8 September 2022, 3:54 pm
Quick Share

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு அமைச்சர் தார்மீக பொறுப்பு ஏற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் நாதன் கூறியதாவது :- கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததால், பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு புகார் அளிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி தருவதாக கூறி சமரசம் ஏற்பட்டதாக வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களில் ஒரு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இன்று இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கில் போதிய முகாந்திரம் இருக்கிறது. எனவே மீண்டும் உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே தற்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும், இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை உடனடியாக பதவி விலக வேண்டும்.

3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் உடனடியாக பதவி விலகவில்லை என்றால் வரும் திங்கட்கிழமை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் நடத்தப்படும், என தெரிவித்தார்.

Views: - 547

0

0