தவறு செய்துவிட்டது திமுக.. திமுகவுக்கு சரிவு ஆரம்பம்.. எச்சரிக்கும் பாஜக முன்னாள் எம்பி சி.பி. ராதாகிருஷ்ணன்!!

Author: Babu Lakshmanan
28 September 2022, 7:59 pm
Quick Share

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமியை சி.பி.ராதாகிருஷ்ணன் மத்திய சிறையில் சந்தித்து பேசினார்.

தந்தை பெரியார் குறித்தும், ஆ.ராசா குறித்தும் இழிவாக பேசியதாக, கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமராமசாமி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாலாஜி உத்தமராமசாமியை அக்கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில பா.ஜ.க பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவை மத்திய சிறையில் சந்தித்து பேசினார்.

பின், கோவை சிறை வாசலில் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தீண்டாமைக்கு எதிரான சட்டத்தை அரசே தவறாக பயன்படுத்தி இருக்கிறது. மாற்று அரசியல் சிந்தனையே இருக்க கூடாது என ஒரு அரசு நினைத்து, கைது செய்து இருப்பது இந்தியாவில் இதுவே முறை. பாலாஜி உத்தமராமசாமி பேசியதற்கு நடவடிக்கைகள் எடுத்து இருக்க வேண்டிய அரசு, அவர் மீது பி.சி.ஆர் சட்டத்தை போட்டு இருக்கிறது. அரசே தவறாக பி.சி.ஆர் வழக்கு பயன்படுத்தி இருப்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.

இதுதான் திமுகவின் சரிவின் துவக்கம். பா.ஜ.க வழக்கறிஞர்கள் ஜாமினுக்கு சட்டரீதியாக முயன்று வருகின்றனர். மேலும், மறுபுறம் இன்னும் கொஞ்சநாள் அவரை சிறையில் வைக்க காவல் துறையும் முயன்று வருகின்றது. மக்களுக்காக அவர்கள் உள்ளே இருக்கின்றனர். சிறையில் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

மேலும், தேசவிரோத அமைப்புகள் யாரை வேண்டும். எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கின்றனர். பி.எப்.ஐ அமைப்பு இந்தியாவாக இல்லாமல், பாகிஸ்தானாக செயல்பட்டு வந்தது. அதன் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.

Views: - 417

0

0