அடுத்தடுத்து திருப்பம்… CTR நிர்மல் குமாரை தொடர்ந்து அதிமுகவில் இணைந்த பாஜக முக்கிய நிர்வாகி!!
Author: Babu Lakshmanan7 மார்ச் 2023, 12:13 மணி
பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமாரை தொடர்ந்து பாஜகவின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அவர் அதிமுகவில் இணைந்தார்.
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது என்றும், சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை எனக் கூறினார்.
மேலும், அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம் என பதிவிட்டிருந்தார்.
சிடிஆர் நிர்மல் குமாரை தொடர்ந்து பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக இருந்த திலீப் கண்ணன் உள்ளிட்டோரும் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திலீப் கண்ணன் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
1
0