தமிழக அரசை பிரதமர் பாராட்டியதால் திமுக பெரும் அதிர்ச்சி : அதிமுகவின் ஆதரவுதான் பாஜகவுக்குத் தேவை – ஸ்டாலின் ஒப்புதல்!!

25 September 2020, 9:00 pm
EPS_Modi - updatenews360
Quick Share

சென்னை:பிரதமர் நரேந்திர மோடி தமிழக அரசை வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது தேசிய அளவில் அதிமுகவின் முக்கியத்துவம் அதிகரிப்பதைக் காட்டுவதால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பாஜகவின் தயவில்தான் அதிமுக அரசு நடக்கிறது என்று இதுவரை சொல்லிவந்த ஸ்டாலின் அதிமுகவின் ஆதரவு மத்திய அரசுக்குத் தேவைப்படுகிறது என்று தற்போது தனது கருத்தை மாற்றிக் கூறியுள்ளார் பிரதமரின் பாராட்டுக்கு உள்நோக்கம் கற்பித்து ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கை மறைமுகமாக அதிமுகவுக்கு டெல்லியில் கூடியிருக்கும் மரியாதையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

கொரோனாவால் கடும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தனர். பலர் வேலையிழந்தனர். வாழ்வாதாரம் இழந்து பல தொழில்களும் பாதிக்கப்பட்டன. கொரோனாத் தொற்று படிப்படியாக ஊரடங்கை நீக்கும்படியும் பொதுப்போக்குவரத்தை அனுமதிக்கும்படியும் மக்கள் கோரினர். மக்களின் கடினமான சூழலை உணர்ந்தபோதும் பொதுப்போக்குவரத்தை அனுமதிக்கும்படியோ, ஊரடங்கை நீக்கும்படியோ ஸ்டாலின் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. மக்கள் தொடர்ந்து பொதுப்போக்குவரத்து இல்லாமலும் ஊரடங்காலும் அவதிப்பட்டால் அதிமுக அரசு மீது அவர்கள் கோபம் கொள்வார்கள் என்று அவர் எதிர்பார்த்ததன் காரணமாகவே, அவர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

EPS - stalin - updatenews360

ஆனால், கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோவும் இடதுசாரிகளும் பொதுப்போக்குவரத்தைத் தொடங்கும்படி அறிக்கை வெளியிட்டனர். மக்களின் சூழ்நிலையையும் மனநிலையையும் உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில் பொதுப்போக்குவரத்தைத் தொடங்கியதுடன் பல தளர்வுகளையும் அறிவித்தார்.

தளர்வுகள் அதிகரித்தால் கொரோனா பாதிப்பு அதிகமாகும் என்ற அஞ்சப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகளை அதிமுக அரசு கட்டுக்குள் கொண்டுவந்தது அரசு. சோதனை எண்ணிக்கை 80-ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 6,000-த்துக்கும் கீழ் குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50,000-க்கும் கீழ் வந்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் அரசுப் பேருந்து அனுமதிக்கப்பட்ட நிலையிலும் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.

குணமடைவோர் கணக்கைக் கருத்தில் கொள்ளாமலும், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை குறைந்து வருவதையும் பார்க்காமல், கொரோனா தமிழ்நாட்டில் கட்டுக்குள் இல்லை என்று கூறிவந்தார் ஸ்டாலின். இந்த நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவது பற்றிய காணொலிக் காட்சிக்கூட்டத்தில் முதலமைச்சர்களிடையே பேசிய பிரதமர் தமிழக அரசைப் பெரிதும் பாராட்டினார். “கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்கும் தமிழ்நாடு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது”, என்றார்.

PM Modi Launches New National Digital Health Mission; Each Indian To Get A Unique Health ID

கொரோனாவைக் கட்டுப்படுத்துவது திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமரின் கருத்து அமைந்துள்ளது. மத்திய அரசின் மதிப்பை தமிழக அரசு பெற்று வருவதையும் பிரதமரின் நல்லெண்ணத்துக்கு உரித்தாகும் நிலையிலும் செயல்பட்டு வருவது ஸ்டாலினுக்குப் புரிந்துள்ளதால், பிரதமரின் பாராட்டுக்கு உள்நோக்கம் கற்பித்து அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“ஏதோ அவருக்கு அரசியல் ரீதியான கட்டாயம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது” என்று அவர் அதில் கூறியுள்ளார். “தமிழக அரசு “சிறப்பாக நடவடிக்கை” எடுத்திருக்கிறது என்று பாராட்டும் நிலையும், நிர்ப்பந்தமும் பிரதமருக்கே ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பது விந்தையாகவும், வேதனையாகவும் இருக்கிறது”, என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ள ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடி தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உளவுத்துறை மூலம், ஒரு ரகசிய விசாரணைக்கு உத்தரவிகுமாறு பிரதமருக்கு ஸ்டாலின் ஆலோசனையும் வழங்கியுள்ளார். ஏற்கனவே, தமிழக அமைச்சர்கள் மீதி சிபிஐ விசாரணை வேண்டும் அவர் கோரியிருந்ததை பிரதமர் கண்டுகொள்ளவில்லை, அடுத்தடுத்த வழக்குகள் திமுகவினர் மீதே பாய்ந்து வருகின்றன.

“கூட்டணி கட்சி என்ற குறுகலான எல்லையை கடந்து வந்து அகன்று விரிந்திருக்கும் ஒரு நாட்டின் பிரதமராக மோடி செயல்பட வேண்டும்” என்று ஸ்டாலின் கூறிய அறிவுரை அதிமுகவை வலிமையான கூட்டணியாக பிரதமர் கருதுகிறார் என்பதையே காட்டுகிறது. மேலும், வேளாண் சட்டங்களை அதிமுக ஆதரித்ததால்தான் பிரதமர் அதிமுக அரசைப் பாராட்டுகிறார் என்று கூறியிருப்பது தேசிய அளவில் அதிமுகவின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதையே உணர்த்துகிறது என்று அரசியல் விமர்சகர்கள் எண்ணுகின்றனர்.

Parliment 01 updatenews360

மாநிலங்களவையில் இதுவரை மத்திய அரசுக்கு ஆதரவளித்துவந்த சிரோன்மணி அகாலிதளம் டிஆர்எஸ், பிஜேடி ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பிய நிலையில் முக்கிய சட்டங்களை நிறைவேற்ற அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு நரேந்திர மோடி அரசுக்கு மிகவும் முக்கியமானதாகிறது என்பதுதான் உண்மைநிலையாகும். தற்போது பாஜகவுக்கு எதிராக பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட 117 உறுப்பினர்கள் அணி திரண்டுள்ளனர். சுயேச்சைகள் சிறிய கட்சிகள் சேர்த்து பாஜகவுக்கு ஆதரவாக 109 பேர் உள்ளனர். இதில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் வேளாண்மை தொடர்பான சட்டங்களுக்கு மட்டுமே ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.

அதிமுகவுக்கு இருக்கும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களே மாநிலங்களவையில் மத்திய அரசின் வெற்றிதோல்வியைத் தீர்மானிப்பார்கள். இனிவரும் காலங்களிலும் முக்கிய சட்டங்களுக்கும் சட்டத்திருந்தங்களுக்கும் அதிமுக ஆதரவு தேவை என்ற நிலை மத்திய அரசுக்கு உருவாகியுள்ளது. அதிமுகவுடன் நல்லுறவைத் தொடர வேண்டிய தேவை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. மாறியிருக்கும் இந்த சூழல் 2021 தேர்தலில் அதிமுகவை வெற்றிபெறச் செய்துவிடுமோ என்ற அச்சமும் தற்போது திமுக தலைமைக்கு உருவாகியுள்ளது.

Views: - 1

0

0