இந்த நிழற்குடை அமைக்க ரூ.1.54 கோடி செலவா..? திமுக எம்பி கனிமொழிக்கு காயத்ரி ரகுராம் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
14 September 2021, 1:05 pm
kanimozhi - gayathri rahuram 1 - updatenews360
Quick Share

தூத்துக்குடியில் சாதாரணபேருந்து நிழற்குடை அமைக்க ரூ.1.54 கோடி செலவு என கணக்கு காட்டியிருப்பதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திமுக தலைவர்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் கனிமொழி. மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட இவர், அங்கேயே வீடு ஒன்று எடுத்து தங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்து வந்தார். அதேபோல, கடந்த சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

மேலும், திமுக ஆட்சியில் ஏதேனும் குற்றச்சாட்டுகளோ, தவறுகளோ நிகழ்ந்தால், வெளிப்படையாக பேசி, ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தாத வண்ணம் செயல்பட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுரையும் வழங்குவார்.

Kanimozhi Minister - Updatenews360

அண்மையில், தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எம்பி நிதியை பயன்படுத்தி பேருந்து நிழற்குடை ஒன்றை அமைக்க உத்தரவிட்டிருந்தார். அந்தப் பணிகள் முடிவடைந்து, அந்தப் பேருந்து நிழற்குடையும் கடந்த 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த நிழற்குடையின் அருகே செலவான தொகை பற்றி விபரம் அடங்கிய கல்வெட்டும் அமைக்கப்பட்டது.

தற்போது, அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ரொக்கத்தின் அளவுதான் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. அதாவது, ஒரு நிழற்குடை அமைக்க ரூ.1.54 கோடி செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுதான் இதற்கு காரணம். இதனை அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு நிழற்குடை அமைக்க இவ்வளவு செலவாகுமா..? ஒரு நியாயம் வேண்டாமா..? என்றெல்லாம் கனிமொழிக்கு எதிராக பேசி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இந்த நிழற்குடை அமைக்க ரூ.1.54 கோடி செலவாகுமா..? என்று திமுக எம்பி கனிமொழிக்கு பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்தக் கேள்விக்கு ஆதரவாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அmதாவது, இன்னும் சிலர் 4 பெட்ரூம் உள்ள ஒரு பிளாட் வாங்கினாலே ஒரு கோடி தாண்டாது என்றும், இந்த தகர ஷீட்டுக்கும் ஸ்டீல் ராடுக்கும் 1.54 கோடியா… என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேவேளையில், திமுக எம்பி கனிமொழிக்கு ஆதரவாகவும் நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். தூத்துக்குடியில் எத்தனை பேருந்து நிலையங்கள் இருக்குனு சொல்லுங்கள் என காயத்ரியிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

Views: - 349

0

1