நாத்திகம் ஒன்னும் ஈவெரா கண்டு பிடிக்கல… விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லாதவருக்கு இதுவே கடைசியா இருக்கனும் ; எச். ராஜா..!!

Author: Babu Lakshmanan
4 September 2022, 7:34 pm
Quick Share

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதவரை மீண்டும் முதலமைச்சராக்கக் கூடாது என் பாஜக தேசிய செயற்குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தை பாஜக செயற்குழு உறுப்பினர் எச். ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தெப்பக்குளம் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் பெற்றது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய எச் ராஜா பேசியதாவது ;- கடந்த இரண்டு வருடங்களாக சீன வைரஸால் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட இயலாமல் போனது. சீன பொம்மைகள், சீன பட்டாசுகள் அனைத்தும் ஆபத்தானது. சீனா உற்பத்தி செய்து அனுப்பிய கம்யூனிஸ்ட் வரை அனைத்தும் தரமற்றவை தான். கம்யூனிசம் என்று சொன்னாலே மக்களை கஷ்டத்தில் தள்ளுவது.

மோடி பிரதமராக இல்லை என்றால் கோவிட் காலத்தில் 50 கோடி பேர் இறந்திருப்பார்கள். மேலும், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் அடுத்த முதல்வராக வரக் கூடாது. வர விட மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்து கொள்வோம். தேச விரோத நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்கள் வந்த பின் உளறுவது அதிமாகி விட்டது. பலரும் பலவற்றை உளறி வருகின்றனர். அன்றைய காலங்களில் கிராமய பாட்டுகள் மூலம் வெள்ளையனை வெளியேற செய்ய பல பாடல்கள் போடப்பட்டது. இங்கு இந்து விரோதிகள், தேச விரோதிகள் அதிகமாக சுற்றி வருகிறார்கள்.

கனல் கண்ணன் “இனிமேல் தாண்டா உள்ளது” என்று கூறியுள்ளார். மேலும், அரசாங்கம் மூளை கெட்டு திறிய கூடாது. தென்னாடுடைய சிவனே போற்றி என்றால் பாரத நாடு முழுமைக்கும் தலைவர் சிவன் என்று அர்த்தம். இறை தூதர்கள் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள். பாரத மாதாவிற்கு நாம் என்ன குடும்ப காட்டுபாடா செய்துவிட்டோம்? இறை தூதர்கள் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள்.

ஊடகங்கள் அனைத்தும் பயந்தாங்கோளியாக இருக்கின்றனர். இந்த அரசாங்கம் கிறித்துவ பாதிரியார் ஜகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும். NGO எல்லாம் கலக்சனுக்காக தான் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் போலி பாஸ்போர்ட் இருந்து மதுரை- அங்கு தான் டேவிட்சன் ஆசிர்வாதம் அதிகாரியாக இருந்தார்.

வெடி மருந்து குன்றின் மீது தமிழ் மக்கள் அமர்ந்துள்ளனர். ஏனென்றால் இங்கு திராவிட மாடல் உள்ளது. அரசியல் வாதிகள் மதத்தினுள் வராமல் இருந்தால் ஆதினங்கள் அரசியல் பேச மாட்டார்கள். திரவிடியன் ஸ்டாக் என்பதே மானங்கெட்டவர்கள் தான். மதமாற்றம் என்பது தேசிய அபாயம் என்பதை நாம் மறந்துவிட கூடாது.

போலீஸ்காரர்கள் இந்துகள் 70% ஒரு இடத்தில் இருந்தால் செண்சிடிவ் ஏரியா என்று பெயர் வைத்துள்ளார்கள். ஆனால் நாம் 100% இருந்தாலும் செண்சிடிவ் இல்லை என தெரிவித்தார். இந்து மதத்தில் தீண்டாமை என்பதே கிடையாது. வேற்றுமை என்பது செய்தொழிலில் உள்ளது. கண்ணன் (தெய்வம்) கூறியுள்ளார். இந்துவில் பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை.

இன்று விநாயகர் சதுர்த்திக்கு கூடினோம் கலைந்தோம் என்று இல்லாமல் வீடுவீடாக சென்று, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் இன்னொரு முறை வந்து விட கூடாது என கூறவேண்டும். பேரியக்கமாக உருவாக வேண்டும். கனல் கண்ணனை வெட்கம் கெட்டவர்தான் கைது செய்வார்கள். திராவிடர்கள் கருத்து திருடர்கள். மேலும், நாத்திகம் ஒன்றும் ஈவெரா கண்டு பிடித்தது இல்லை. இன்று காட்டியிருக்கிற ஒற்றுமையை நாம் தொடர்ந்து காட்ட வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

இந்த ஊர்வலமானது தெப்பக்குளம் மைதானத்தை தொடங்கி காந்தி பார்க் வழியாக சென்று முத்தண்ணன் குளத்தில் நிறைவடைந்து விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் இந்து முன்னனியினர் சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு மாணவர்கள் சிலம்பம் சுழற்றியவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

Views: - 234

0

0