அடுத்த 3 மாதத்தில் பாஜகவை விட்டு வெளியேறப் போகும் பெரிய தலைவர்கள் ; அண்ணாமலை சொன்ன பகீர் தகவல்..!!

Author: Babu Lakshmanan
8 March 2023, 9:40 pm
Annamalai - Updatenews360
Quick Share

பாஜக காலம் வந்து விட்டதாக கருதுகிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:- எனது பெயருக்கு பின்னால் எம்.பி., எம்.எல்.ஏ போடுவதற்காக வரவில்லை. பாரதிய ஜனதா வளர வேண்டும் என்பதே இலக்கு. அதற்காக மட்டுமே மாநில தலைவராக எனது முயற்சிகளில் உள்ளது. நேற்று கூறியது தான் எனது கருத்து. வேறு வேறு கட்சிகளில் இருப்பவர்கள் வளர்ந்த கட்சிகளில் இணைந்து வளர்ந்து இருக்கிறார்கள்.

பாஜகவின் தொண்டன் அப்படியல்ல. யாரும் போகாத பாதையில் போய்க் கொண்டிருக்கின்றோம். எங்கள் பாதை தனியாக தான் இருக்கும். அதை யாருடனும் ஒப்பிட முடியாது. பாஜக காலம் வந்து விட்டதாக நான் கருதுகிறேன். கூட்டணியின் மகிமை என்னவென்றால் எங்களின் தனிப்பட்ட கருத்தை கூறுகிறோம். அதற்கு உரிமை இருக்கிறது. எங்கள் பாதையில் அப்படியே இருப்போம். எந்த சங்கடமோ, வருத்தமோ இல்லை.

அதிமுகவை பொருத்தவரை அவர்களது நிலைப்பாட்டில் இருக்கிறாகள். பாஜகவை பொருத்தவரை எங்களது நிலைப்பாட்டில் இருக்கிறோம். தமிழகத்தில் மான நஷ்ட வழக்கு போடாமல் அரசியல் செய்பவன் நான் மட்டுமே.அது எனது பாலிடிக்ஸ் ஸ்டைல். ஆன்லைன் ரம்மி குறித்து பாஜகவும் எதிர்க்கிறது. நாங்களும் இரண்டு முறை ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

பொன்முடி பேசுவது புதிதல்ல. முதலமைச்சரும் இதை கண்டிக்கவில்லை. பாஜகவில் பல மாவட்டங்கள இணைந்துள்ளனர். ஆனால் இரண்டாம், மூன்றாம் தரத்தில் உள்ளவர்கள் போனால், அதை பெரிதாக எடுக்கிறார்கள் என்றால், பாஜகவை உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என அர்த்தம் அடுத்த மூன்று மாதத்தில் பல பெரிய தலைவர்கள் போகலாம். பல முக்கிய தலைவர்கள் வரலாம், என தெரிவித்தார்.

Views: - 505

0

0