திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெளிமாநில பக்தர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
108 வைணவ திவ்ய தேசமாக திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக, வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது, சபரிமலை சீசன் என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த நிலையில், ஐயப்ப பக்தர்கள் வழக்கம் போல இன்று காலை ரங்கநாதரை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது பக்தி பரவசத்தில் மூலஸ்தானத்தில் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்தனர். அந்த சமயம், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், கோவிந்தா கோவிந்தா என கோஷம் செய்யக்கூடாது என கூறியுள்ளனர்.
ஆனால், அவர்கள் நாங்கள் பெருமாளை கோவிந்தா கோஷத்துடன் தான் தரிசிப்போம் எனக் கூறி, ரங்கநாதரை தொடர்ந்து கோஷமிட்டு வழிபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ரவி மற்றும் கோவில் பாதுகாவலர்கள் 3 பேரும் சேர்ந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஒரு ஐயப்ப பக்தருக்கு ரத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டியது.
இதனை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் ரத்தம் சொட்ட சொட்ட போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் பக்தர்களை சமாதானம் செய்தனர். அதேவேளையில், இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகளுக்கு பின் நடை திறக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசுக்கு இந்து கோவில்களில் இருப்பதற்கான எந்த வேலையும் இல்லை. 42 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை சென்று விட்டு திரும்பிய பக்தர்கள், ரங்கநாத சுவாமியை தரிசிக்க வந்துள்ளனர்.
அவர்களை நீண்ட நேரம் வரிசையில் காக்க வைத்ததுடன், ஒருசிலருக்கு மட்டும் சலுகை அளிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்ட பாஜக சார்பில் கோவிலுக்கு வெளியே இன்று போராட்டம் நடைபெறும், என தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.