சென்னை : தமிழகத்தில் 2 நாட்களில் 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவத்தால், காவல்துறையின் மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் சிறை மரணங்கள் தடுக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலையத்தில் விக்னேஷ் என்பவரும், திருவண்ணாமலை கலால் காவல்நிலையத்தில் தங்கமணி என்பவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையிலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, லாக் அப் மரணங்களை தடுக்க டிஜிபி சைலேந்திர பாபு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதாவது, விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களை இரவு நேரங்களில் சிறையில் வைக்கக் கூடாது என்றும், அவர்களை அடிக்கக் கூடாது என பல்வேறு உத்தரவுகளை போட்டார். அதுமட்டுமல்லாமல், காவலர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் வழங்கும் விதமாக, பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்த அப்பு (எ) ராஜசேகர் என்பவரை விசாரணைக்காக கொடுங்கையூர் போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பான பிரச்சனை அடங்குவதற்குள், நாகை மாவட்ட சிறையில் இருந்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அடுத்தடுத்த லாக் அப் மரணங்களால் காவல்துறையின் மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல் அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை
கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா???, என தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.