எனக்கே விபூதி அடிக்க பாத்துச்சு திமுக… நான் அரசியலுக்கு வர அவங்கதான் காரணம் : அண்ணாமலை கலகலக பேச்சு!!

Author: Babu Lakshmanan
19 August 2022, 1:23 pm
Quick Share

நான் IPS படிச்சதற்கு திமுக காரணமல்ல என்றும், ஆனால், அரசியலுக்கு வருவதற்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சின்னப்பா பூங்கா அருகே பாஜக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது, மேடையில் பேசிய அவர், 70 ஆண்டுகால தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக புதுக்கோட்டை திகழ்வதாகவும், இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றும் கூறினார்.

மேலும், டெல்லிக்கு போவதற்கே முதல்வருக்கு பயம் என்றும், அதனால்தான் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் டெல்லி செல்ல தயங்குவதாகக் கூறினார். பாஜக அருகே வருவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, திமுகவில் எந்த தலைவருக்கு பாஜக தொண்டனுடன் நிற்கும் தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அண்ணாமலை ஐபிஎஸ் ஆவதற்கு திமுகதான் காரணம் என்று திமுகவினர் கூறியது குறித்து பேசிய அவர், இது ஒரு ஸ்டிக்கர் அரசு, திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டதிற்கு முன்னரே நான் படித்த கல்லூரி தொடங்கப்பட்டுவிட்டதாகவும், எனக்கே விபூதி அடித்து விட்டதாக கிண்டலாகக் கூறினார்.

தொடர்ந்து, நான் படித்ததிற்கு திமுக காரணமா என்பது எனக்கு தெரியாது என்றும், ஆனால் நான் அரசியலுக்கு வந்ததற்கு திமுக தான் காரணம் என்றும், நடுத்தர சாதாரன வாழ்வு நடத்தி கொண்டு இருந்த என்னை திமுக நாசகர ஆட்சியின் பாதிப்பு தான் அரசியலுக்கு வர வைத்தது, என்றார்.

மேலும், மகாராஷ்ட்ரா மாநில உத்தவ் தாக்ரே குடும்பம் போல், இங்கே ஸ்டாலின் குடும்பம் உள்ளதாகக் கூறிய அண்ணாமலை, சிவசேனா – திமுக கட்சிகளுக்கு பத்து பொருத்தமும் சரியாக உள்ளதாகவும்,. அங்கு ஒரு ஏக்நாத் சின்டே கிளம்பிவிட்ட நிலையில், இங்கே ஒரு சின்டே கிளம்ப மாட்டாரா..? நிச்சியம் கிளம்புவார் என்றும், அதனால் தான் திமுகவிற்கு தற்போது நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.

மேலும், பாஜகவிற்கு வந்துவிட்டு வெளியே செல்பவர்கள் தங்களோடு சேர்த்து தேசிய சித்தாந்தையும் எடுத்து செல்வதாகக் கூறிய அவர், வருகின்ற அனைவரையும் அரவணைக்கும் கட்சி பாஜக என்றும், ஊழல் செய்பவர்களும், குடும்ப ஆட்சியாளர்களும் மட்டுமே பாஜகவிற்கு எதிரானவர்கள் எனக் கூறினார்.

Views: - 632

0

0