கரூர் : ஆர்எஸ்எஸ் இயக்கம் செய்த வேலைகளைப் பற்றி பார்ப்பதற்கு வட மாநிலங்களுக்கு ரயில்வே டிக்கெட் எடுத்து திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் அனுப்பி வைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூரில் பாரத பிரதமர் மோடி அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய கனவு திட்டமான 2025 ஆண்டிற்குள் முற்றிலும் காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதன் முறையாக மாவட்டத்தில் உள்ள 100 காசநோயாளிகள் சிகிச்சை பெற்று வருபவர்களை தத்தெடுத்து, அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான ஊட்டசத்து பொருட்கள் வழங்கும் விழா கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்க பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த பிறகு, திடீரென அந்த அனுமதியை ரத்து செய்த கரூர் மாவட்ட ஆட்சியரின் செயல் வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் தேவையில்லாமல் அரசியல் பார்ப்பது வருத்தம் அளிக்கிறது. அரசியல் என்பது ஒரு சேவை மட்டும்தான் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேசவிரோத வழக்கு பதிந்து, குண்டர் சட்டத்தில் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், கரூரில் பாஜக நிர்வாகிகள் வீடுகளிலும், கிராமப்புறங்களிலும் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.
திமுக மத வாத கட்சியா? பாஜக மதவாத கட்சியா? என்று முதல்வர் தான் சொல்ல வேண்டும். ஒரு மதத்திற்கு வாழ்த்து கூறுகிறார். மற்றொரு மத நிகழ்விற்கு வாழ்த்து கூற மறுக்கிறார். RSS இந்திய கலாசாரத்தை உலகம் முழுவதும் எடுத்து செல்லும் இயக்கம். 100 ஆண்டுகளை கடந்த இயக்கம்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் செய்த வேலைகளைப் பற்றி பார்ப்பதற்கு வட மாநிலங்களுக்கு ரயில்வே டிக்கெட் எடுத்து திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் அனுப்பி வைக்கிறேன். அங்கு சென்று ஆர் எஸ் எஸ் செய்த வேலைகள் குறித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இஸ்லாமிய நண்பர்கள் உள்ளன.
எனக்கு கட்சியை நடத்தவே நேரம் இல்லை. எம்.பி, எம்எல்ஏ பதவிகள் மீது எனக்கு ஆசை இல்லை. தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு எந்தவித கண்டன கண்டன அறிக்கையை முதல்வர் தெரிவிக்கவில்லை. ஆனால் பதிலுக்கு எங்கள் மீது பழியை சுமத்துகிறார். முதல்வர் அவ்வப்போது கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறார். நாங்கள் தட்டி எழுப்பி வருகிறோம். தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சி ஒரு சாபக்கேடானது, என்றார்.
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
பிரபலங்கள் திருமணம், கர்ப்பம், புதிய கார், பைக் வாங்கவததை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிர்கர்களிடம் வாழ்த்துகளை பெற்று வருகின்றனர். இதையும் படியுங்க:…
This website uses cookies.