தவறு செய்பவர்கள் பாஜகவில் தொடர முடியாது.. அது யாராக இருந்தாலும் சரி… காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் குறித்து அண்ணாமலை கருத்து

Author: Babu Lakshmanan
23 November 2022, 2:38 pm
Quick Share

சென்னை : லட்சுமண ரேகையை தாண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள புதியதாக துவக்கப்பட உள்ள தனியார் டீ கடையின் 200வது கிளையினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகப்பேரில் இந்த கடையில் மூன்றாவது கிளையை திறந்து வைத்துள்ள நிலையில், தற்போது இருநூறாவது கிளை திறந்து வைத்துள்ளேன்.

சிறுகுறு தொழில் செய்யக்கூடியவர்கள் முன்னேற வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. இதுபோன்று சிறிய தொழில்களை ஆரம்பித்து லட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். ஒரு கடை ஆரம்பிப்பது மூலம் நான்கு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக தெரிவித்தார்.2025-ல் 5 ட்ரில்லியன் டாலரை கட்ட வேண்டும் என மிகப் பெரிய இலக்கை நோக்கி மத்திய அரசு பயணித்து வருகிறது.

திமுக கட்சிகார்ர்கள் எப்படி பெண்களை நடத்துகிறார்கள் என்பது தெரியும். கட்சியில் இரண்டு நபர்கள் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு குறித்து பேசி இருக்கிறார்கள். முதல் கட்டமாக விசாரணை கமிட்டி நாளை திருப்பூரில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்க உள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாரையும் விடப் போவதில்லை.

நாணயத்தில் இரண்டு பக்கமும் உள்ளது போல், நாளை இது குறித்து இரண்டு தரப்பும் விசாரணை நடைபெறும். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உரையாடலை தனிப்பட்ட பேச்சுவார்த்தை என்று கருத முடியாது.

கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக லட்சுமண ரேகை தாண்டக்கூடியவர்கள் மீது தலைவர் என்கிற ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், காயத்ரி ரகுராம் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. பாஜக என்ற பேருந்தில் தவறு செய்பவர்கள், சரியாக செயல்படாதவர்கள், பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டு, புதியதாக பயணம் செய்ய விரும்புவர்கள் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவர்

தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கான மேற்கொள்ள வேண்டும் என எனக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி பொருத்தவரை அதிமுக அதில் பெரிய கட்சியாக தமிழகத்தில் திகழ்கிறது. மேலும், கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக அதற்கான ஒரு சிஸ்டம் செயல்முறை வியூகங்கள் வகுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. தற்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தை பேசுவதற்கு போதிய கால அவகாசம் இருக்கிறது.

டிடிவி தினகரன் பாஜகவோட கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து வரும் நாட்களில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதற்கான சில நடைமுறைகளும், செயல் திட்டங்களும் இருக்கின்றன. அதற்கான காலமும் இருப்பதால் தற்போது அது குறித்து தெரிவிக்க முடியாது.

கட்சியின் வளர்ச்சிக்கு தடைகளாக இருக்கக்கூடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கட்சியில் எத்தனை ஆண்டு காலம் இருந்தார்கள் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ள முடியாது. தேவைப்படின் பாஜக என்ற பேருந்தில் மாநில தலைவராக இருக்கக்கூடிய நான் கூட மாற்றப்படலாம். அது கட்சியின் வளர்ச்சிக்கான செயல்பாடாக தான் இருக்கும், என தெரிவித்தார்

Views: - 382

0

0