106 நாள் திகார்… காரைக்குடிக்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி… ப.சிதம்பரத்தை பங்கம் செய்த எச். ராஜா..!!!

19 April 2021, 6:06 pm
h raja - p chidambaram 1- updatenews360
Quick Share

சென்னை : பிரதமர் மோடி குறித்து விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் செயல்களை எதிர்கட்சி தலைவர்கள் அடிக்கடி விமர்சிப்பதும், அதற்கு, பாஜகவினரும் பதிலடியும், விளக்கமும் கொடுத்து வருவதும் வழக்கமான ஒன்று. அந்த வகையில், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வருவதை முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார்.

P Chidambaram - Updatenews360

அதாவது, “மேற்கு வங்கத்தை கைப்பற்றி மாநிலத்தில் எப்படியாவது ஆட்சி அமைக்கும் போராட்டத்திற்க்கு மத்தியில், கொரோனா நெருக்கடியை சமாளிக்க, பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரம் செலவிட்டுள்ளார். இதற்காக, அவருக்கு என் நன்றி,” எனத் தெரிவித்திருந்தார்.

ப.சிதம்பரத்தின் இந்த கருத்திற்கு காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளரும், பாஜக மூத்த தலைவருமான எச். ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தாங்களும் தங்கள் குடும்பமும் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் போராட்டத்திற்கு (106 நாள் திஹார் அனுபவம் நினைவிருக்கும்) இடையில் காரைக்குடி தொகுதிக்கு நேரம் ஒதுக்கியதற்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனராமே,” எனத் தெரிவித்துள்ளார்.

எச். ராஜாவின் இந்தக் கருத்திற்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக காங்கிரஸ் – திமுகவினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 181

1

0