முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்திக்கிறார் பாஜக தலைவர் எல்.முருகன்!!

9 October 2020, 4:44 pm
L Murugan - Updatenews360
Quick Share

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று மாலை சந்தித்து பேசுகிறார்.

அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகித்து வரும் வேளையில், எதிர்வரும் தேர்தலிலும் இந்தக் கூட்டணியே தொடரும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்து வந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால், அதிமுக – பாஜக கூட்டணியில் மாற்றம் நிகழும் என அரசியல் தலைவர்கள் கூறி வந்த நிலையில், அதிமுகவுடனான பாஜக கூட்டணி நீடிக்கும் என மாநில தலைவர் எல். முருகன் இன்று மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று மாலை சந்தித்து பேசுகிறார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. மரியாதை நிமர்த்தமான சந்திப்புதான் என பாஜகவினர் கூறி வந்தாலும், இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதிமுக – பாஜகவினர் சந்தித்து பேசுவது குறிப்பிடத்தக்கது.

Views: - 79

0

0