திமுக அமைச்சர் கார் மீது காலணி வீசிய பாஜகவினர் : விமான நிலையத்தில் பரபரப்பு…. அதிர்ச்சி வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2022, 1:49 pm
Slipper On DMk Minister Car - Updatenews360
Quick Share

மதுரை : வீரமரணம் இடைந்த தமிழக ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக அமைச்சர் பிடிஆர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு, அவரது உடலுக்கு தியாகராஜன், கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, அதிகாரிகள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த காத்திருந்தனர்.

அப்போது அரசு நிகழ்ச்சிக்கு கட்சியினர் குவிந்தது ஏன் என தியாகராஜன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவருக்கும் பா.ஜ.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அஞ்சலி செலுத்திவிட்டு தியாகராஜன் கிளம்பிய போது, அவர் கார் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 219

0

0