உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில்தான் : ஜேபி நட்டா பெருமிதம்..!!

21 June 2021, 4:50 pm
jp nadda -updatenews360
Quick Share

இந்தியாவில்தான் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லால் மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நேரில் பார்வையிட்டார்.

அப்போது, மருத்துவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த பொதுமக்களிடமும் அவர் கலந்துரையாடினார்.

பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தடுப்பூசி மையத்தில் ஆய்வு செய்தேன். அனைத்து பணிகளும் சுமூகமாக நடந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி பணிகள் பற்றி எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.

Views: - 128

0

0