கைகட்டி, வாய் பொத்தி காவடி தூக்கியது எப்படி என்பதும் தெரியும் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி…!!

Author: Babu Lakshmanan
16 August 2022, 9:57 pm
Quick Share

பாஜகவுடன் எப்போதும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்L பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லிக்கு நான் காவடி தூக்கவா போறேன்? கை கட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போறேன்? கலைஞர் பையன் நான், என்று அதிரடியாக பேசினார்.

மேலும், திமுகவின் கொள்கைக்கும், பாஜவின் கொள்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும், திமுகவின் கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டுத்தர மாட்டோம் எனக் கூறிய அவர், பாஜகவுடன் குறைந்தபட்ச சமரச திட்டத்தை கூட திமுக செய்து கொள்ளாது என்று கூறினார்.

அவரது இந்தப் பேச்சு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது :-
எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் தி மு க உறுதியாக இருக்கும் என்பதும் அறிவோம். ஊழலற்ற, நேர்மையான, தேசிய சிந்தனை கொண்ட பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள திமுக வால் இயலாது என்பதும் அறிவோம்.

தமிழினத்தை கொன்று குவிக்க உதவிய போது டெல்லி காங்கிரசிடம், திமுக, கை கட்டி, வாய் பொத்தி காவடி தூக்கியது எப்படி என்பதும் தெரியும். இந்திரா காந்தி அவர்களை புடவை கட்டிய ஹிட்லர் என்று கூறி விட்டு, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன் நீங்கள் என்பதும் தெரியும், என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

Views: - 122

0

0