அதிமுக ஆட்சியில் எப்ப பார்த்தாலும் போராட்டம்… இப்ப சைலண்ட் Mode-ல் திமுக கூட்டணி கட்சியினர் : டாக்டர் சரவணன் விமர்சனம்

Author: Babu Lakshmanan
4 April 2022, 5:40 pm
Quick Share

மீனாட்சியம்மன் திருக்கல்யாண தினத்தில் பாஜக சார்பில் மதுரையில் 1 இலட்சத்து 8 வீடுகளுக்கு பிரசாதம் வழங்கப்படும் என டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடைபெற உள்ள திருக்கல்யாண நிகழ்வை காண வரும் பக்தர்களுக்கு கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய வலியுறுத்தி, பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் மனு அளித்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- மீனாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்வை காண கட்டணம் வசூல் செய்வது கண்டனத்துக்குரியது. மீனாட்சியம்மன் கோவிலில் கட்டண வசூல் நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்யவில்லை.மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நடைபெற்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை.

தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரை பொருட்காட்சி நடத்த வேண்டும். மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மதுரையில் நகர்ப்புற தேர்தலில் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் அதிக அளவில் வாக்கு பதிவாகி உள்ளதை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம்.

அதிமுக ஆட்சி காலத்தில் தினந்தோறும் போராட்டம் நடத்திய திமுக கூட்டணி கட்சிகள், வாக்கு வங்கிக்காக திமுக ஆட்சியில் அமைதி காக்கிறது. எப்ரல் 6ஆம் தேதி பாஜக தொடங்கப்பட்ட நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். எப்ரல் 6 முதல் 14 ஆம் தேதி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக காத்திருந்த திமுக, தற்போது சொத்து வரியை பன்மடங்காக உயர்த்தி உள்ளனர். மீனாட்சியம்மன் திருக்கல்யாண தினத்தில் பாஜக சார்பில் மதுரையில் 1 இலட்சத்து 8 வீடுகளுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளோம், எனக் கூறினார்.

Views: - 444

0

0