பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசனுக்கு கொரோனா : தனியார் மருத்துவமனையில் அனுமதி..!
31 August 2020, 4:05 pmசென்னை : பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய் தொற்றுக்கு முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், போலீஸார் மற்றும் தூய்மை பணியாளர்கள் மட்டுமின்றி, அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள். உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. தற்போது புறநகர் ரயில் சேவை, பள்ளி கல்லூரிகள், தியேட்டர் உள்ளிட்டவை திறக்க மட்டுமே தடை தொடர்கிறது.
இந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
0
0