திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் எல்.முருகனை தகுதியற்றவர் என்று கூறியதற்கு, தமிழக பாஜக பொதுச்செயலாளர் இராம ஶ்ரீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்திய அமைச்சராக இருப்பதற்கே தகுதியில்லாதவர் என்று திமுக எம்பி டிஆர் பாலு பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. பட்டியலின அமைச்சர் ஒருவரை இப்படி பேசலாமா..? என்று அவருக்கு எதிராக கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
டிஆர் பாலுவின் இந்தப் பேச்சு ஒட்டுமொத்த பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும், அமைச்சர் எல்.முருகன் குறித்து இழிவாக பேசிய திமுக எம்பி டிஆர் பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய அமைச்சர் எல்.முருகனை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மிகவும் கொச்சையாக பேசி அவமானப்படுத்த முயற்சித்திருக்கிறார். ‘Unfit’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். உண்மையில் நாம் இதற்கு கோபம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எல்.முருகனே கூட Unfit அமைச்சர்தான்.
கோபாலபுரத்து சீமான்களின் வாரிசாக வந்தவர் இல்லை முருகன், எனவே அவர் Unfit தான். இத்தனை ஆண்டுகள் பட்டியல் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தும் மத்தியில் அமைச்சராக இருந்தும் முறையற்ற வழியில் கோடி கோடியாய் பணம் சேர்க்கவில்லை, எனவே Unfit தான். சினிமாவில் நடித்து புகழ் சேர்க்கவில்லை, எனவே Unfit தான்.
என்னை புதைத்த இடத்தில் கோபாலபுரத்து அடிமை அங்கே சமாதியில் இருக்கிறான் என்று சொல்லுங்கள் என்று மூத்த திமுக தலைவர்களே சொல்வது போல கொத்தடிமை சாசனம் எழுதவில்லை அவர். எனவே அவர் Unfit தான்.
திருட்டு ரயில் ஏறி அரசியலுக்கு வந்தவர் அல்ல அவர், எனவே Unfit தான். ஒன்று இரண்டு மூன்று என்று வாழ்க்கைத் துணை நலன்களை வரிசைப்படுத்திக் கொண்டவர் அல்ல அவர். எனவே அவர் Unfit தான். ஒரு செருப்பு தைப்பவரின் பேரன் உலகத்தின் மிகப் பெரும் ஜனநாயகத்தில் மத்திய அமைச்சராக இருக்கிறார் என்பதையும், அப்படிச் செய்தவர் நரேந்திர மோடி என்பதையும் இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவர்களின் ஜனநாயகப் பண்பே இவ்வளவுதான்.
ஏன் இவ்வளவு கோபம் முன்னாள் அமைச்சரே?. முரசொலி அறக்கட்டளைக்கு பஞ்சமி விவகாரத்தில் முருகன் சம்மன் அனுப்பினாரே என்ற கோபமா…? வேல் யாத்திரை நடத்தி உங்களது இந்து விரோத போக்கை தோலுரித்தாரே என்ற கோபமா…? சாமானிய ஒருவன் கோபாலபுரத்து சீமான்களுக்கு சமமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறானே என்று கோபமா…? ‘Fitness Challenge’க்கு நாங்கள் தயார், அமைச்சரே நீங்கள் தயாரா??? அடுத்த நாடாளுமன்றத்திலும் எல்.முருகன் அமைச்சராக தொடர்வார். அடுத்த நாடாளுமன்றத்தில் உங்களுக்கு அமர இடம் இருக்குமா..? அந்த ‘Fitness’ உங்களுக்கு இருக்குமா அமைச்சரே?” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.