இது சில்லறைத்தனமான வேலை.. தந்தை, மகன், பேரன் விளம்பரம் தான் முக்கியமா..? திமுக மீது வானதி சீனிவாசன் பாய்ச்சல்

திமுகவை பொறுத்தவரை எது நடந்தாலும், அதற்கு யார் காரணமாக இருந்தாலும், ‘தந்தை – மகன்- பேரன்’ தான் காரணம் என்று விளம்பரம் செய்வதை வழக்கமாகவே வைத்திருப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- அடிப்படை விளையாட்டுகளையும், மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தையும் ஊக்குவிக்க ‘கேலோ இந்தியா’ (விளையாடு இந்தியா) விளையாட்டு போட்டிகளை கடந்த 2017-ல் பிரதமர் நரேந்திர மோடி துவக்கினார். 2023-ம் ஆண்டுக்கான 6-வது ‘கேலோ இந்தியா’ போட்டிகளை, ஜனவரி 19-ம் தேதி சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வரும் 31-ம் தேதி வரை நடக்கும் இப்போட்டிகளில், 5,600 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை மட்டுமல்லாது கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் இப்போ போட்டிகள் நடந்து வருகின்றன.

‘கேலோ இந்தியா’ போட்டிகள் நடப்பதையொட்டி, கோவை மாநகரின் பல இடங்களில், தமிழ்நாடு அரசு சார்பில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதாவது, ‘தந்தை – மகன் – பேரன்’ ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ‘கேலோ இந்தியா’ என்பது தேசிய அளவிலான போட்டி. இது பிரதமர் மோடியின் சிந்தனையில் உதித்த கனவு திட்டம். ‘கேலோ இந்தியா’ போட்டிகள் நடக்கவே மோடி அவர்கள் தான் காரணம். போட்டிகளை தொடங்கி வைத்ததும் அவர்தான். ஆனால், தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களில் பிரதமரின் படம் இல்லை. ஆனால், மத்திய அரசின் சார்பில் கோவை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிக்கான விளம்பரத்தில் முதல்வர் ஸ்டாலினின் படம் இடம்பெற்றுள்ளது.

அரசியல் ரீதியாக திமுகவுடன் வேறுபாடுகள் இருந்தாலும், மாநில அரசுக்கான, மாநில முதலமைச்சருக்கான மரியாதையை பாஜக அரசு எப்போதும் கொடுத்து வருகிறது. அதனால்தான், கோவை விமான நிலையத்தில் மத்திய அரசு வைத்துள்ள விளம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் படம் இடம்பெற்றுள்ளது. ஆனால், திமுகவை பொறுத்தவரை எது நடந்தாலும், அதற்கு யார் காரணமாக இருந்தாலும், ‘தந்தை – மகன்- பேரன்’ தான் காரணம் என்று விளம்பரம் செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். ‘கேலோ இந்தியா’ போட்டிக்கு காரணமான பிரதமர் மோடியை இருட்டடிப்பு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

குறுகிய நோக்கத்துடன் விளம்பரப் பதாகையில் மோடியின் படத்தை இடம்பர செய்யாமல் தடுக்கலாம். ஆனால், மக்களின் மனங்களில் இருந்து பிரதமர் மோடியை அகற்றிவிட முடியாது. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. பிரதமர் மோடியின் படத்துடன் ‘கேலோ இந்தியா’ போட்டிக்கான விளம்பரப் பதாகைகளை தமிழ்நாடு அரசு வைக்க வேண்டும். இதுபோன்ற சில்லறைத்தனமான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

2 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

2 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

2 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

2 hours ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

3 hours ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

3 hours ago

This website uses cookies.