செலக்ட் கமிட்டிக்கும், ஸ்டேண்டிங் கமிட்டிக்கும் வித்தியாசம் தெரியாதவர் அமைச்சர் செந்தில் பாலாஜி : பாஜக கிண்டல்!!

Author: Babu Lakshmanan
11 August 2022, 3:55 pm
Quick Share

செலக்ட் கமிட்டிக்கும், ஸ்டேண்டிங்க் கமிட்டிக்கும் வித்யாசம் செந்தில்பாலாஜிக்கு தெரியுமா..? கமிஷன் மண்டி போல நினைத்து கொண்டு அவர் பேட்டி அளித்து வருவதாக கரூரில் பாஜக மாநிலதுணைத்தலைவர் கே.பி.இராமலிங்கம் விமர்சித்துள்ளார்.

கரூர் மாவட்ட பாஜக சார்பில், மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில், கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, தேசிய கொடிகளை ஏந்தி, ஊர்வலமாக கரூர் பேருந்து நிலையம் வழியாக பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாநிலத்துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலத்துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், தமிழகமே போதைப்பொருள் சந்தையாக மாறி வருவதாகவும், தீவிரவாதத்திற்கு அடித்தட்டு விதைக்கும் களமாகவும் மாறி வரும் தமிழகத்தினை கட்டுபடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறியதாகவும், அவர் சர்வாதிகாரியாக மாற நாடு அனுமதிக்காது என்று மு.க.ஸ்டாலினுக்கு புத்திமதி கூறினார்.

அதற்கு பதிலாக, திமுக ஒன்றிய செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமில்லாது அவர்களது குடும்பத்தினரையும், போதைப்பொருட்களை கடத்தும் கும்பல்களுக்கு தொடர்பில் இருக்க வேண்டாம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் போடுவோம் என்று அறிவித்தால் மட்டும் போதும் என்றும், அதை இன்றே அறிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

அதை விட்டு விட்டு எம்.எல்.ஏ க்களுக்கு கடிதம், சர்வாதிகாரியாக மாறுவேன், ஹிட்லராக மாறுவேன் என்று வெறும் வாய்ஜாலம் காட்டுவது சரியாகாது என்று கூறிய அவர், நம் தேசம் ஒரே நாடு, இந்திய பேரரசு, இந்த பேரரசு திருப்பணி தான் நமது தலையாய கடமை என்று அனைவரும் வீட்டில் சுதந்திர கொடியை ஏற்றுவோம் என்பதே ஏங்களது லட்சியம் என்றும் அவர் கூறினார்.

மேலும், மின்சார திருத்த சட்டம் 2013 ம் ஆண்டில் பிரதமராக மன்மோகன் சிங் காங்கிரஸில் இருந்ததாகவும், அப்போதும் திமுக கூட்டணி கட்சியாக இருந்தது என்று கூறிய அவர், மத்திய அரசின் மின் திருத்த சட்டம் அன்றே பரிந்துரைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், ஸ்டேண்டிங்க் கமிட்டி, செலக்ட் கமிட்டிக்கும் இங்குள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வித்தியாசம் தெரியாது என்றுமம், ஏதோ கமிஷன் மண்டி நட்த்துவது போல நடத்தி வருவதாகவும் கூறினார்.

இதன்மூலம், சந்தோஷமாக அவரும் உள்ளார், அவரது பாஸையும் சந்தோஷமாக வைத்து வருகின்றார் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினையும் விமர்சித்தார்.

தமிழகத்தினுடைய அமைச்சர்களில் இவர் நம்பர் ஒன் ஏனென்றால், அவருடைய கட்சிக்கு இவர் நெம்பர் ஒன், வருமானம் சேர்த்து கொடுப்பதில் என்றார். தற்போதைய தமிழக அரசு, மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கின்ற நிலையில் இருக்கும் ஒரு அரசு, ஆகவே பல்வேறு திட்டங்களை ரத்து செய்து ஆயத்த வேலைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகின்றனர். அப்படி விவசாயிகளின் இலவச மின்சாரத்தினை ரத்து செய்தால் முதல்வர் மற்றும் மின் துறை அமைச்சர் ஆகியோரின் வீடுகள் முற்றுகையிடுவோம் என்றும் அவர் கூறினார்.

Views: - 519

0

0