குஜராத் நகராட்சி, பஞ்சாயத்து தேர்தலிலும் பாஜக அமோகம் : காங்கிரசுக்கு பெருத்த அடி…!!!

2 March 2021, 5:41 pm
Gujarath bjp win - updatenews360
Quick Share

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களிலும் பாஜக அதிக இடங்களில் முன்னிணியில் உள்ளது.

குஜராத் மாநிலத்தில் 81 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சுயத்துக்கள் மற்றும் 231 தாலுகாக்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 21ம் தேதி நடந்தது. இதில், நகராட்சிக்கு நடந்த தேர்தலில் 58.82 சதவீத வாக்குகளும், மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான தேர்தலில் 65.80 ஆகவும், தாலுகா பஞ்சாயத்துகளுக்கான தேர்தலில் 66.60 சதவீதமாகவும் வாக்கு பதிவாகின.

6 மாநகராட்சிகளுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 576 வார்டுகளில் பா.ஜ.க. 483 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 55 வார்டுகளை மட்டுமே கைப்பற்றியது. ஆம் ஆத்மி 27 வார்டுகளிலும், ஒவைஸி கட்சி 7 வார்டுகளையும், கைபற்றியுள்ளது.

சூரத் மாநகராட்சியை பொறுத்தவரையில் 120 வார்டுகளில் 93-ஐ பாஜக வென்றது. காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. முதன்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 28ம் தேதி நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 31 மாவட்ட பஞ்சாயத்துகளிலும் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது. 81 நகராட்சி இடங்களில் 71-ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 5 நகராட்சிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

தாலுகா பஞ்சாயத்துகளில் மொத்தமுள்ள 231 இடங்களில் பாஜக 185 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

Views: - 20

0

0