மோடியை பிரதமராகப் பெற்றது நாம் செய்த அதிர்ஷ்டம் : நடிகை கங்கனா ரனாவத் புகழாரம்..!

17 September 2020, 10:53 am
modi - kangana ranaut - updatenews360
Quick Share

மும்பை : மோடியைப் போன்ற ஒருவரை பிரதமராக பெற்றது நாம் செய்த அதிர்ஷ்டம் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை நாடு முழுவதும் செப்.,14ம் தேதி முதல் 20ம் தேதி வரை பல்வேறு நலத்திட்ட உதவிகளை பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர். பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

kangana_updatenews360

இந்த நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்தைக் கூறியுள்ளார். அதில், “நம் நாட்டின் சாமானியருக்கு கூட அவர் மீது மரியாதை உள்ளது. மோடியைப் போன்ற ஒருவரை பிரதமராக பெற்றது நாம் செய்த அதிர்ஷ்டம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என ஒப்பிட்டு பேசியதால், நடிகை கங்கனா ரனாவத்திற்கு சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்திருந்தனர். இதையடுத்து, அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு கொடுத்தது. இதையடுத்து, கங்கனா ரனாவத் தனது குடும்பத்துடன் பா.ஜ.க.வில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், இந்த கருத்தை அவர் வெளியிட்டிருப்பது, அந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக உள்ளது.

Views: - 0

0

0