சென்னை கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரூ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அண்மையில் பெங்களூரூவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே எனும் பிரபல உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில், கடையின் ஊழியர், வாடிக்கையாளர்கள் மற்றும் டெலிவரி பாய் என மொத்தம் 8 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், பையில் குண்டை வைத்து தாககுதல் நடத்திய நபரின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் கோவையில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து, தலைமை செயலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன், வெடிகுண்டு தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். ஆனால், எந்தப் பொருளும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சென்னை கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரூ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரூ காவல் கட்டுப்பாட்டு அறை மின்னஞ்சல் முகவரிக்கு bomb blast in Chennai temple soon என்று jaffersait@outlook.com என்ற இமெயில் முகவரி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து. சென்னை பெருநகர காவல்த்துறையை தொடர்புகொண்டு பெங்களூரு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ள நிலையில்,மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பல கோயில்களில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் வந்துள்ளது. அதாவது, ‘Bomb Blast in Chennai Temple Soon’ என jaffersait@outlook.com என்ற இமெயில் முகவரி மூலம் மிரட்டல் விடுக்கும் மெயில், பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.