எல்லையில் தொடர்ந்து வாலை ஆட்டும் பாகிஸ்தான் : அத்துமீறி தாக்குதல்.. இந்திய வீரர் வீரமரணம்
21 November 2020, 12:38 pmஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி எந்தவித தாக்குதல்களையும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி கடந்த 2003ம் ஆண்டு இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தங்களை போட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை துளியும் மதிக்காத பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து, அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா துறையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் நேற்று சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0