72வது குடியரசு தினவிழாவின் சிறப்பு விருந்தினராக இங்.,பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்பு

3 December 2020, 5:20 pm
Modi_Borris_UpdateNews360
Quick Share

இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க இருக்கிறார்.

இந்தியாவில் 72வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் பிரமாண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அன்றைய தினம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றுகிறார்.

இதனிடையே, நாட்டின் 72வது குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று, போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வருகை தர இருப்பதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 71-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் பங்கேற்கேற்றார். கொரோனா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவுக்கு வரும் முதல் வெளிநாட்டு தலைவர் போரிஸ் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 26

0

0