எச்.ராஜாவை தொடர்புபடுத்தி வெளியான அறிக்கை மோசடியானது : தாம்ப்ராஸ்‌ அறிவிப்பு

3 November 2020, 7:55 pm
Madurai H Raja- updatenews360
Quick Share

பாஜக மூத்த தலைவர்‌ எச்‌.ராஜாவை சம்மந்தப்படுத்தி வெளிமிடப்பட்டுள்ள அந்த மோசடி அறிக்கைக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பில்லை என்று தமிழ்நாடு பிராமணர்‌ சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சமூக வலைதளங்களில்‌, யாரோ ஒருவரோ அல்லது ஒரு இயக்கமோ எங்களது பெயரை முறைகேடாக பயன்படுத்தி ஓர்‌ உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வருவதாக அறியப்படுகின்றது. எங்கள்‌ சங்கம்‌ சார்பில்‌ நாங்கள்‌ உயர்ந்த குலம்‌, தாழ்ந்த குலம்‌ என்று எந்த ஒரு அறிக்கையினையும்‌ எந்த ஊடகங்களிலும்‌ வெளியிடவில்லை என்பதனை தெளிவாகவும்‌, உறுதியாகவும்‌ அறிவிக்கின்றோம்‌.

எங்கள்‌ சங்க விதிகளின்படி அறிக்கை கொடுப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்‌ தலைவராகிய எனக்கு மட்டும்‌ தான்‌ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அறிக்கையிலும்‌ நான்‌ எங்களது விலாசம்‌ இன்றி அறிக்கை வெளியிடுவது வழக்கம்‌ இல்லை. தேசியமும்‌, தெய்வீகமும்‌ இரு கண்கள்‌ என்று தமிழக பொது வாழ்க்கையில்‌ ஓர்‌ உன்னதமான கோட்பாட்டினை வழங்கிச்‌ சென்றிருக்கின்ற பசும்பொன்‌ முத்துராமலிங்க தேவர்‌ அவர்களை ஒவ்வொரு பிராமணரும்‌ என்றென்றும்‌ நினைவில்‌ கொண்டு பாராட்டிப்‌ போற்றி வருகின்றோம்‌.

எங்கள்‌ சங்கத்தின்‌ கோட்பாடுகளில்‌ உயர்ந்த குலம்‌. தாழ்ந்த குலம்‌ என்கின்ற சிந்தனைக்கே இடமில்லை. எங்கள்‌ சங்கத்தின்‌ பெயரை முறை தவறி பயன்படுத்தி, பொய்யான அடிப்படையிலும்‌, பாஜக தலைவர்‌ திரு.எச்‌.ராஜா அவர்களை சம்மந்தப்படுத்தியும்‌ வெளிமிடப்பட்டுள்ள அந்த மோசடி அறிக்கைக்கும்‌, தமிழ்நாடு பிராமணர்‌ சங்கத்திற்கும்‌ (தாம்ப்ராஸ்‌) எந்த வித தொடர்பும்‌ இல்லை என்பதனை உறுதிபட தெரிவிக்கின்றேன்‌.

இது போன்ற முறைகேடான, பொய்யான மோசடி அறிக்கையினை வாக்கு வங்கி அரசியலுக்காகவோ அல்லது ஏற்பட்ட அவப்பெயரினை போக்கிக்‌ கொள்ள முயற்சித்தோ, ஓர்‌ அரசியல்‌ தலைவரோ அல்லது அரசியல்‌ இயக்கமோ அல்லது வேறு ஒரு இயக்கமோ வெளியிட்டுள்ளது என்று சந்தேகிக்கின்றோம்‌. இந்த மறுப்பு அறிக்கையினைத்‌ தொடர்ந்து, இது பற்றி காவல்‌ துறையில்‌ புகார்‌ அளிக்கவும்‌ திட்டமிட்டுள்ளோம்‌ என்பதனை தெரிவித்துக்‌ கொள்கின்றேன்‌, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 31

0

0